92 நாடுகளின் ஐபோன் பயனர்களை மீண்டும் எச்சரித்த ஆப்பிள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

92 நாடுகளில் உள்ள ஐபோன் பயனர்கள், உளவு பார்க்கப்படும் அபாயம் உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் இன்று மீண்டும் எச்சரிக்கைகளை அனுப்பியுள்ளது.

அதிகாலை 12.30 மணியளவில் ஆப்பிள் தனது ஐபோன் பயனர்களுக்கு மீண்டும் ஒரு உளவு அபாய எச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளது. யாரையும் குற்றம்சாட்டாமல் இந்த எச்சரிக்கை மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இத்தகவல் எத்தனை பேருக்கு சென்றடைந்துள்ளது என தெளிவான தகவல்கள் குறிப்பிடப்படவில்லை.

அந்த எச்சரிக்கை மின்னஞ்சலானது அலர்ட்: ஆப்பிள் உங்கள் ஐபோனுக்கு எதிராக குறி வைக்கப்பட்ட கூலி உளவு மென்பொருள் தாக்குதலைக் கண்டறிந்துள்ளது என்ற தலைப்பில் அனுப்பியுள்ளது. அந்த தகவலில், இத்தகைய தாக்குதல்கள் அரிதானவை மற்றும் மிகவும் அதிநவீனமானவை. அதிக செலவில் ஒரு சிலரை மட்டுமே குறிவைக்கின்றன.

 எனவே அறிமுகம் இல்லாத அனுப்புநர்களிடமிருந்து வரும் இணைப்புகள் (லிங்குகள்) குறித்து பயனர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆப்பிள் இந்த எச்சரிக்கையில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. தயவுசெய்து இதை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் என ஆப்பிள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

iPhone பயன்படுத்துபவர்கள் நஷ்டஈடு பெற முடியும் | Thedipaar News

Related Posts