ஒருகாலத்தில் தமிழசினிமாவை கலக்கிய நடிகை! இப்போது எப்படி இருக்கிறார்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவிற்கு 90களில் நடிக்க வந்த முக்கியமான நடிகைகளில் ஒருவர் அஞ்சலா ஜவேரி. ஹீரோயினுக்கென்றே உள்ள எல்லா அளவுகோலுக்கும் சரியாக பொருத்தமானவர். திறமையான நடிகையும் கூட! ஹிந்தி மொழியில் தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் தமிழ் பக்கம் அஜித் மற்றும் சத்யராஜ் நடித்த பகைவன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் இந்தி, தெலுங்கு, மலையாள என மாறி மாறி நடித்தவர் கொஞ்சம் கவர்ச்சியிலும் கலக்கி வந்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழில் பிரபு தேவா நடித்த உள்ளம் கொள்ளை போகுதே படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

தமிழில் கடைசியாக இனிது இனிது படத்தில் நடித்த அஞ்சலா, தருண் அரோரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். 51 வயதாகும் அஞ்சலாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் அழகாக உள்ளாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள். ரசிகர்கள் கூறுவது போலவே இந்த வயதிலும் இளமை வயதில் பார்த்த அதே முக தோற்றம் தான் இந்த நடிகைக்கு. 50 வயது பெண் போலவே இல்லை. இப்போது ஹீரோயினாக நடிக்க வந்தாலும் கண்டிப்பாக ரசிகர்கள் இவரை ஏற்றுக்கொள்வார்கள்.

Related Posts