தமிழ் சினிமாவையே குத்தாட்டம் போட வைத்த நடிகை எப்படி இருக்காங்க?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பாலிவுட் படத்தில் கவர்ச்சி நடன நாயகியாக அறிமுகமானவர் நடிகை முமைத் கான். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் குத்தாட்டம் போட்டுள்ளார். சொல்லப்போனால் கவர்ச்சி நடனம் என்றாலே இவர் கண்டிப்பாக இந்த படத்தில் இருப்பார் என எதிர்பார்க்கலாம் என்ற அளவிற்கு வளர்ந்தார். மஜ்னு படத்தில் கிளாமர் டான்சராக தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே பாடல் படு மாஸ் நடனம் ஆட ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டார். தெலுங்கு சினிமாவில் போக்கிரி படத்தில் மகேஷ் பாபுவுடன் ஆட்டம் போட்ட முமைத் கான் தமிழில் தளபதி விஜய்யுடன் போக்கிரி படத்திலும் நடனமாடி பிரபலமானார். முக்கியமாக கந்தசாமி படத்தில் என் பேரு மீனாகுமாரி பாடலுக்கு இவர் நடனமாடியது தான் இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பை உருவாக்கியது. 

2016ல் தடுக்கி விழுந்ததில் முமைத் கானுக்கு தலைக்கு அடிபட்டு மூளைக்கு பிரச்சனை வர 15 நாட்கள் சுயநினைவு இல்லாமல் கோமாவில் இருந்துள்ளார். இந்த நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்து தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் போதைப் பொருள் வழக்கில் சிக்க நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதுவும் சர்ச்சைக்கு உண்டான வகையில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆகையால் தற்சமயம் இவர் நடிக்கவில்லை என்றாலும் கூட எப்போதும் சர்ச்சை நாயகியாகவே உள்ளார். 38 வயதாகும் முமைத் கான் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வருகிறார். தற்போது அவரது லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

Related Posts