தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க ஒரே தீர்வு ரணில்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான விருப்பம் ஏற்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்பாணத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க எவ்வாறான நிலைப்பாட்டில் இருந்தார் என்பது முக்கியமல்ல.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு விடயங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான விருப்பம் தற்போது அவரிடம் காணப்படுகிறது.

அத்துடன், தற்போதைய காலச்சூழலில் நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றக் கூடிய தலைமைத்துவ ஆளுமையும் அவரிடம் உள்ளது.

எனவே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆதரவு வழங்கினால் தமிழர்களுக்கான தீர்வினை தம்மால் பெற்றுக்கொடுக்க முடியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (P)


Related Posts