மத்திய கிழக்கில் போர் பதற்றம்: இஸ்ரேல் நோக்கிச் சென்ற இலங்கையர்கள் குழு சிக்கி தவிப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் சென்ற இலங்கையர்கள் குழுவொன்று துபாயில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நேற்று இரவு முதல் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

இதனால் பல நாடுகளின் வான் பரப்புகள் மூடப்பட்டன. இஸ்ரேல் மீது ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக கிடைத்த தகவலையடுத்து, இலங்கையர்கள் உள்ளிட்ட பயணிகளுடன் சென்ற விமானம் துபாய்க்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.

சில இலங்கை பயணிகளுடன் வந்த குறித்த விமானம் துபாய்க்கு திருப்பி விடப்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் விமான தாமதங்கள் இருப்பதாகவும், விமான அட்டவணையில் சாத்தியமான மாற்றங்களுக்கு அந்தந்த விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Related Posts