இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் வொஷிங்டனில் விசேட கலந்துரையாடல்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பில் வொஷிங்டனில் விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் நாளைய தினம் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மத்திய ஆண்டு மாநாடு ஆரம்பமாகவுள்ளது.

அதன்போது, நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான பயனுள்ள கலந்துரையாடலில் பங்கேற்கத் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். (P)


Related Posts