தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஷால். இவரை பற்றி பேசினாலே அடுத்து என்ன படம் செய்துகொண்டு இருக்கிறார் என்ற பேச்சு வருவதில்லை, எப்போது கல்யாணம் என்ற டாக் தான் முதலில் வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனிஷா ரெட்டி என்பவருடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், அது திருமணம் வரை போகவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் விஷாலிடம் வரலக்ஷ்மி நிச்சயதார்த்தம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், வரலக்ஷ்மி தெலுங்கில் நல்ல மார்க்கெட்டை அமைத்திருக்கிறார்.
உண்மையில் அவரை நினைந்து நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். அவருடைய சினிமா வாழ்க்கையை தாண்டி அடுத்த கட்டத்திற்கு அவரின் வாழ்க்கையை நகர்த்த ஆரம்பித்து இருக்கிறார். அதற்கும் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஷாலும், நடிகை வரலக்ஷ்மியும் காதலித்து வந்ததாகவும், ஆனால் இந்த காதல் கைகூடவில்லை என்றும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இருவரும் நாங்க நண்பர்கள் என சொல்லிவிட்டார்கள். இப்போது வரலட்சுமி மும்பையில் தொழிலதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்துகொள்ள உள்ளார்.