ரொறன்ரோவில் 400 கிலோ தங்க கொள்ளை சம்பவத்தில் தமிழரும் கைது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு 400 கிலோ தங்கம் மற்றும் அமெரிக்க டொலர்கள் களவாடப்படடிருந்தன.

விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட தங்கம் மற்றும் பணம் அடங்கிய பெட்டி களஞ்சியச்சாலையில் வைக்கப்பட்டதன் பின்னர் களவாடப்பட்டிருந்தது.

தங்கம் மற்றும் ரொக்கப் பணத்தின் மொத்தப் பெறுமதி சுமார் 21.1 மில்லியன் டொலர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பற்றி இதுவரை தகவல் வெளியாகாமல் இருந்தது. 

இப்போது சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏனைய விபரங்களை வெளியிட உள்ளனர்.

இதில் 34 வயதான பிரசாத் பரமலிங்கம் என்ற தமிழரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. 

இன்று முதல் புதிய விசா நடைமுறை | Thedipaar News

Related Posts
©   Thedipaar

யாழில் வாள்வெட்டு