கொத்து ரொட்டி விவகாரம் – கடை உரிமையாளருக்கு பிணை !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபர் 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வாழைத்தோட்ட பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

அளுத்கடை பகுதியில் உள்ள வீதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்திய
சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரை வாழைத்தோட்ட பொலிஸார் நேற்று (16) கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டவர் ஒரு கொத்து ரொட்டியின் விலையை கேட்டபோது, ​​1,900 ரூபா என்று கூறியதுடன் கடை உரிமையாளர் அதனை வாங்குமாறு அச்சுறுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் இந்த நாட்களில் வைரலாகி வருவதுடன், அந்த காணொளியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு 12 இல் வசிக்கும் 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். (P)

தமிழ் கட்சிகள் உசுப்பேத்தும் கதையே கதைப்பார்கள் ; டக்ளஸ் | Thedipaar News

Related Posts