ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளுக்கு தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தண்டனை நிச்சயம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


”ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் மற்றும் தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் இன்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடினர்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இச் சந்திப்பின் பின்னர் சட்டத்தரணி சுனில் வட்டகல ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

” ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 270 இக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் 500 இக்கும் மேற்பட்டவர்கள் இதனால் காயமடைந்தனர்.

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரிகளை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பார்கள் என நாம் இவ்வளவு வருடம் காத்திருந்தோம். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி பெற்றுக்கொடுக்கப்படவில்லை. குற்றவாளிகள் அடையாளங்காணப்படவுமில்லை.

குற்றவாளிகள் அல்லது சூத்திரதாரிகள் உயர்மட்ட அரசியல் சக்திகளினால் பாதுகாக்கப்படுவதாகவே தெரிகிறது. இந்த தாக்குதல்கள் தொடர்பாக தமது ஆட்சியில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளதாக கொழும்பு பேராயர் நேற்றைய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

நாம் அதனை இன்று எழுத்துபூர்வமாக கையளிப்பதற்காகவே ஆயரைச் சந்தித்திருந்தோம். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் மற்றும் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்” இவ்வாறு சுனில் வட்டகல ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். (P)

கடைகளில் புற்றுநோயை உண்டாக்கும் சுவையூட்டிகள் கண்டுபிடிப்பு

Related Posts