கனடாவின் வரலாற்றில் மிகப்பெரிய தங்க கொள்ளை சம்பவம் ரொறன்ரோ விமான நிலையத்தில் கடந்த ஆண்டு நடந்தது. இந்நிலையில், பல மில்லியன் டாலர் தங்கக் கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆறு பேரில் குறைந்தது இரண்டு இந்திய வம்சாவளி ஆண்களும் அடங்குவர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த வழக்கில் மேலும் மூன்று நபர்களுக்கு அதிகாரிகள் வாரண்ட் பிறப்பித்துள்ளனர் என்று பீல் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 17, 2023அன்று, 22 மில்லியனுக்கும் அதிகமான கனேடிய டாலர்கள் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை ஏற்றிச் சென்ற விமான சரக்குக் கொள்கலன், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பாதுகாப்பான சேமிப்பு வசதியிலிருந்து திருடப்பட்டது என்று காவல்துறை கூறியுள்ளது.
குறைந்தபட்சம் இரண்டு முன்னாள் ஏர் கனடா ஊழியர்கள் இந்த துணிச்சலான திருட்டுக்கு உதவியதாகக் கூறப்படுகிறது. ஒருவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். மற்றவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவைச் சேர்ந்த பர்ம்பல் சித்து(54) மற்றும் அமித் ஜலோட்டா(40) ஆகிய இருவரும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தர்கள் ஆவர்.
இவர்களுடன் அம்மாட் சவுத்ரி(43) அலி ராசா(37) மற்றும் இலங்கை தமிழர் பிரசாத் பரமலிங்கம்(35) ஆகியோர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
பிராம்ப்டனைச் சேர்ந்த டுராண்டே கிங்-மெக்லீன்(25), துப்பாக்கிக் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் தற்போது அமெரிக்காவில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் புலனாய்வாளர்கள் அவரையும் அவரது சட்ட ஆலோசகரையும் தொடர்பு கொண்டுள்ளனர்.
கடைகளில் புற்றுநோயை உண்டாக்கும் சுவையூட்டிகள் கண்டுபிடிப்பு