திறமையான நடிகை ஏன் இப்போது சினிமா பக்கம் வருவதில்லை?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மந்த்ரா. தமிழ் சினிமாவில் இவருக்கென்று தனிப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஹீரோயினாக இருந்தாலும் சரி, கவர்ச்சி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி இவர் எதையும் ஏற்று நடிப்பார். திறமையான நடிகை என சினிமா வட்டாரத்தில் பெயர் எடுத்தவர். முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நேரம் பார்த்து திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார். இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என்று பல மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். 

தமிழில் அஜீத் நடித்த ரெட்டை ஜட வயசு, விஜய்யின் லவ் டுடே உள்ளிட்ட படங்களில் மந்த்ரா நடித்துள்ளார். மந்த்ரா கடந்த 2005 -ம் ஆண்டு உதவி இயக்குனராக இருந்த ஸ்ரீமுனி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ரிதிமா என்ற மகள் உள்ளார். பிஸி நடிகையாக வலம் மந்த்ரா, திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ள இவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குழந்தை திருமணத்தில் இருந்து தப்பிய மாணவி - தேர்வில் முதல் மதிப்பெண்! | Thedipaar News

Related Posts