திடீரென மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட வில்லன் நடிகர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் தான் மன்சூர் அலி கான். நடிப்பில் மட்டுமல்ல அரசியலிலும் இவர் செம ஆக்டிவாக உள்ளார். ஒரு காலத்தில் சினிமாவில் வில்லனாக இவர் வந்தாலே, பயப்படும் அளவிற்கு இருக்கும். முரட்டு தனமான வில்லனாக இருப்பார். இப்போது சினிமாவில் காமெடியனாக வலம் வருகிறார். இப்போது இவர் அரசியலில் ஹீரோவாக இறங்கியுள்ளார். நாட்டிற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற வேட்கையோடு தான் சுயேட்சையாக இறங்கியுள்ளார். சொல்லப்போனால் இவருக்கு ஆதரவும் உண்டு, ஆனால் அந்த ஆதரவு வெற்றி பெறும் அளவிற்கு உள்ளதா என்பது சந்தேகம் தான். 

இந்தநிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த இவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதன் பின் குடியாத்தத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் மன்சூர் அலி கான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குடியாத்தம் சந்தையிலிருந்துபிரச்சார பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது கட்டாயபடுத்தி பழச்சாறு மோர் கொடுக்கப்பட்டது. குடித்த சில நிமிடங்களில் நெஞ்சி வலியும், மயக்கமும் ஏற்பட்டது என்று மன்சூர் அலி கான் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.


Related Posts
©   Thedipaar

யாழில் வாள்வெட்டு