முற்றிலும் மாறிப்போன கமல்ஹாசன் முன்னாள் மனைவி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் கமல் ஹாசன். இவர் நடிகை வாணி கணபதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு பின்னர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். அடுத்ததாக நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர் கமலின் இரண்டாம் மனைவி. இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன். சரிகாவையும் விவாரத்து பெற்று பிரிந்தார் கமல். 

இதன்பின் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில், ஸ்ருதி ஹாசன் தனது தாய்யுடன் அவ்வப்போது எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது தனது தாய் சரிகாவுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஒரு காலத்தில் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த சரிகாவா இது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Related Posts