குக் வித் கோமாளி 5வது சீசனில் பங்கேற்க உள்ள நடிகைகள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

குக் வித் கோமாளி 5வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.இதில் இத்தனை சீசன்கள் நடுவராக இருந்து வெங்கடேஷ் பட் இல்லை, அவருக்கு பதில் மாதம்பட்டி ரங்கராஜ் வருகிறார். நடுவர், தொகுப்பாளர்கள், சில கோமாளிகள் குறித்த தகவல் ஏற்கெனவே வெளியாகிவிட்டது, வீடியோவுடன் வெளியானது. குக் வித் கோமாளி 5வது சீசன் போட்டியாளர்கள் யார் என்பது தான் இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த நிலையில் தான் சமூக வலைதளங்களில் ஒரு 5 போட்டியாளர்களின் பெயர்கள் வலம் வருகிறது. 

அதில், பிரபல தொகுப்பாளினி பிரியங்கா, சீரியல் நடிகை சுஜிதா, அக்ஷய் கமல், யூடியூப பிரபலம் இர்பான், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள் என கூறப்படுகிறது. இப்போது வந்துள்ள தகவல் என்னவென்றால் குக் வித் கோமாளி 5வது சீசனில் புதிய கோமாளியாக சீரியல் நடிகை ஷப்னம் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. முந்தைய சீசன்களை ஒப்பிடும் போது கண்டிப்பாக இந்த சீசன் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் எந்த சீசனுக்கும் இல்லாத அளவிற்கு இந்த சீசன் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Related Posts