நடிகர் சூரி காமெடியனாக ஆரம்பகாலத்தில் நடித்து படிப்படியாக முன்னேறி தற்போது ஹீரோவாக மாறி இருக்கிறார். நடிப்பை தாண்டி ஹோட்டல் போன்ற பல பிசினஸ் செய்து வருகிறார். அவர் ஹீரோவாக விடுதலை படத்தில் அறிமுகம் ஆன நிலையில் அடுத்து விடுதலை 2, கொட்டுக்காளி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இனி இவர் காமெடியனாக நடிப்பாரா என்பது சந்தேகமே ஏனெனில் இவர் ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு இவரது செல்வாக்கு உயர்ந்துவிட்டது.
இந்தநிலையில், இன்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சினிமா நடிகர்கள் பலரும் காலையில் இருந்தே ஆர்வத்துடன் வாக்களித்தனர். அஜித், த்ரிஷா, விஜய், குஷ்பூ என சொல்லிக்கொண்டே போகலாம்.
நடிகர் சூரி வழக்கம்போல வாக்களிக்க சென்றபோது அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவரது பெயர் வாக்காளர் பட்டியலிலேயே இல்லையாம்.
இதனால் வாக்களிக்காமல் வெளியில் வந்த சூரி, எனக்கு ஓட்டு இல்லைனு சொல்லிட்டாங்க, எங்கு என்ன தவறு நடந்தது என தெரியல, மற்றவர்கள் தவறாமல் வாக்களிங்க என கூறிவிட்டு ஓட்டு போடாமலே கிளம்பிவிட்டார்.