பிரபல நடிகையை கைப்பிடித்த திரிஷாவின் முன்னாள் காதலர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் திரிஷா. ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் சில காலமாக நடிக்கும் படங்கள் எல்லாமே படுதோல்வியாக மாறியது. பின்னர் மீண்டும் கம் பேக் கொடுத்தவர், 96, பொன்னியின் செல்வன் போன்ற பல வெற்றி படங்களை கொடுக்க ஆரம்பித்தார். அந்த வெற்றி காரணமாக மீண்டும் விஜய் உடன் இணைந்து லியோ படத்திலும் நடித்துவிட்டார். அஜித்துடன் விடாமுயற்சி, கமலுடன் தக் லைஃப், சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா, மோகன்லாலுடன் ராம் என பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமா? Goat படத்தில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் திரிஷா நடனமாடியுள்ளார் என கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டில் இருந்து திரிஷாவிற்கு பட வாய்ப்புகள் குவிகிறது. 40 வயதாகியும் முன்னணி நடிகையாக முன்னணி நடிகர்களின் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக உள்ள நயன்தாரா கூட திருமணம், வாடகைத்தாய் குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார். 

ஆனால் திரிஷாவோ திருமணம் என்ற வார்த்தைக்கு கூட வாழ்க்கையில் இடம் கொடுக்காமல் உள்ளார். நடிகை திரிஷாவிற்கு வருண் மணியன் எனும் தொழிலதிபருடன் கடந்த 2015ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது. ஆனால், இருவருக்கும் இடையே என்ன நடந்தது என தெரியவில்லை, திடீரென இருவரும் பிரிந்துவிட்டனர்.இந்த நிலையில், திரிஷாவை திருமணம் செய்யவிருந்த வருண் என்பவர் பிரபல நடிகை பிந்து மாதவியை டேட்டிங் செய்து வருகிறார் என கூறப்பட்டது. திரிஷாவுடன் அவர் உறவில் இருக்கும்போது, நான் அவரை டேட்டிங் செய்யவில்லை என்றும் கூறியுள்ளாராம். அதனால் தான் திருமணம் நின்றுவிட்டதா? என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Related Posts