சீரியலில் சின்ன ரோலில் நடிக்கும் நடிகை இவ்வளவு பெரிய ஆளா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல் தான் டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது. சீரியல் பார்க்க பிடிக்காதவர்களை கூட சீரியல் பார்க்க வைத்துவிடும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. அப்பாவி மருமகள் மீனா வில்லி மாமியாரிடம் சிக்கி படும் கஷ்டங்கள் தான் இந்த சீரியலின் கதை. கதை மட்டுமின்றி மீனா - முத்து ஜோடியின் அழகான வாழ்க்கையும் சீரியல் ஹிட் ஆக இன்னொரு காரணம். ஹீரோயின் மீனாவின் தங்கை ரோலில் நடித்து வருபவர் சங்கீதா. சீரியலில் அவருக்கு சின்ன ரோல் தான் என்றாலும், அவரது நிஜ வேலை பற்றி தெரிந்தால் பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கும். 

சங்கீதா டாக்டர் படிப்பை முடித்துவிட்டு அந்த வேலையை பார்த்துக்கொண்டே தான் நடிப்பு மீது இருக்கும் ஆர்வத்தால் சீரியலில் நடிக்கிறாராம். அவர் டாக்டர் என்பது பலருக்கும் சர்ப்ரைஸ் ஆன தகவல் தான். பல நடிகை நடிகர்கள் டாக்டர் படிப்பை முடித்துவிட்டு சினிமாவிற்குள் வருகிறார்கள். ஷங்கர் மகள் அதிதி, சாய்பல்லவி, கட்டா குஸ்தி பட கதா நாயகி ஐஸ்வர்யா லட்சுமி என பலரை சொல்லலாம்.

Related Posts