உலகில் மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறும் ஐரோப்பா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஐரோப்பிய கண்டத்தின் வெப்பம் சர்வதேச சராசரியைவிட இரண்டு மடங்கு வேகமாக அதிகரித்துவருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறிகின்றனர். 

இது மனிதர்களின் உடல்நலன், பனிப்பாறை உருகுதல், பொருளாதார நடவடிக்கைகளின் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கின்றது.

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கிய நகர்வை துரிதப்படுத்தினால் இந்த அபாயத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளது. 

ஐரோப்பிய கண்டம் கடந்த ஆண்டு தனது தேவையில் 43 சதவீத மின்சாரத்தை புதுப்பிக்கித்தக்க எரிசக்தி மூலம் உருவாக்கியுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் 36 சதவீதமாகவே இருந்தது என்ற தகவலும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

உலகளவில் மார்ச் 2024, தொடர்ச்சியாக 10வது அதீத வெப்பநிலை கொண்ட மாதமாக பதிவாகியுள்ளது. ஐரோப்பிய கண்டத்தின் சமுத்திரங்களின் கடல் மேல்பரப்பின் சராசரி வெப்ப அளவு 2023-ல் மிக அதிகமாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அதீத வெப்பத்தால் ஐரோப்பிய கண்டத்தில் மனித உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு புயல், வெள்ளம், காட்டுத்தீக்கு 150 உயிர்கள் இரையாகின. 2023-ல் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் 13.4 பில்லியன் யூரோக்களை எட்டியது.

இலங்கையில் அதிக வெப்பம் ; இளநீர் விலை அதிகரிப்பு! | Thedipaar News

Related Posts