சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் இங்கிலாந்து!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சட்டவிரோதமாக வருபவர்களை தடுக்க இங்கிலாந்து அரசு முயற்சித்து வருகிறது. குறிப்பாக, சட்டவிரோதமாக நுழைபவர்களை ருவாண்டா நாட்டிற்கு நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

2022-ல் போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்தபோது இதற்கான திட்டம் கொண்டு வரப்பட்டது. சட்டவிரோதமாக இங்கிலாந்துக்கு வரும் புலம்பெயர்ந்தோரை தடுக்கவும், ஆட்கடத்தலில் ஈடுபடுவோரின் வணிகத்தை முறியடிக்கவும் ருவாண்டா திட்டம் உருவாக்கப்பட்டது. அப்போதிருந்து இந்த விவகாரம் சர்ச்சையில் சிக்கியது. சட்டப் போராட்டங்களும் நடைபெற்றன.

இந்நிலையில், புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவிற்கு நாடு கடத்துவதற்கான சட்ட மசோதா இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதையடுத்து புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவிற்கு விமானங்களில் அனுப்பும் நடவடிக்கையை தொடங்க உள்ளதாக பிரதமர் ரிஷி சுனக் கூறி உள்ளார். 

இந்த புதிய சட்டம், சிறிய படகுகளில் மக்கள் ஆங்கில கால்வாய் வழியாக நாட்டிற்குள் வருவதைத் தடுப்பதற்கான தனது உறுதிமொழியை நிறைவேற்ற உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.இ

ந்த மசோதா இந்த வார இறுதியில் சட்டமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர், தஞ்சம் கோரி விண்ணப்பித்தவர்களை அரசு பிடித்து வைக்கத் தொடங்கும். இது, சட்ட போராட்டம் தீவிரமடைய வழிவகுக்கும்.

சீரியலில் சின்ன ரோல் நிஜத்தில் இவ்வளவு பெரிய ஆளா? | Thedipaar News

Related Posts