துபாயில் இயல்பு நிலைக்கு திரும்பிய விமான போக்குவரத்து!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கனமழை பாதிப்பில் இருந்து துபாய் சர்வதேச விமான நிலையம் முழுமையாக மீண்டுள்ளது. தற்போது அங்கு சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் விமான போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. இதில் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. சில விமானங்கள் வேறு பகுதிக்கு திருப்பி விடப்பட்டது.

ற்போது மழைவெள்ளம் முற்றிலும் அகற்றப்பட்டு, விமான போக்குவரத்து கால அட்டவணை மீண்டும் சரியான நேரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

துபாய் சர்வதேச விமான நிலையம் தற்போது மீண்டும் நாள் ஒன்றுக்கு 1,400 விமானங்களை இயக்கி இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 100 சதவீதம் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளதால் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகியவை வழக்கம்போல் செயல்படுகின்றன.

இலங்கையில் அதிக வெப்பம் ; இளநீர் விலை அதிகரிப்பு! | Thedipaar News

Related Posts