சூர்ய வம்சம் திரைப்படத்தில் சொப்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்து நாயகியாக அறிமுகமானவர் லாவண்யா தேவி. இவர் படையப்பா, சங்கமம், ஜோடி, சேது, தெனாலி, சமுத்திரம், வில்லன், அலை, திருமலை, கஜேந்திரன், தங்கமகன் உட்பட பல பெரிய படங்களில் நடித்திருக்கிறார். சினிமா வாய்ப்பு கிடைக்காமல் சீரியலில் நடிக்க ஆரம்பித்தவர் அங்கேயும் தனது திறமையை நிரூபித்தார். பின்னர் மீண்டும் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்தவர் சில காலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். 10 வருடங்களுக்கு பிறகு இப்போது பகாசுரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியலிலும் நடித்து வருகிறார். சின்னத்திரை, வெள்ளித்திரை என நடித்துவந்த லாவண்யா தனது 43வது வயதில் திருமணம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், இவ்வளவு வயதாகியும் இதுவரை வரை திருமணம் செய்யாததற்கு காரணம் என்னுடைய குடும்ப சூழ்நிலைதான்.
எனக்கு பெரிய அளவில் வருமானம் இல்லாததால் அடுத்தடுத்த வேலைகளிலேயே கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தேன் என்னுடைய குடும்பத்தினரும் எனக்கு சப்போர்ட்டாகவே தான் இருந்தார்கள்.இப்போது தான் திருமணம் செய்து கொள்ள நேரம் கிடைத்தது என கூறியுள்ளார். இவர்களது திருமணம் காதல் திருமணமாம். இவர் போன்ற சில சினிமா கலைஞர்களுக்கு வாய்ப்பும் பெரிதாக கிடைப்பதில்லை, வாழ்க்கையும் சரியான நேரத்தில் அமைவதில்லை. இருப்பினும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் வாய்ப்பை தேடி!