ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக வீரசேன கமகே அவர்கள் இன்று (24) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அநுராதபுர மாவட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் கே.எச். நந்தசேன அவர்கள் இறப்பெய்தியமையின் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்துக்கே வீரசேன கமகே அவர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டார்.
1945 இல் பிறந்த வீரசேன கமகே, கெக்கிராவ மத்திய மகா வித்தியாலயத்தில் தனது கல்வியை நிறைவு செய்துள்ளார். 1991 இல் அரசியல் நடவடிக்கைளை ஆரம்பித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் கெக்கிராவ பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அவர் அதன் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டுள்ளார். (P)