கல்யாண வீட்டில் மணப்பெண்ணை ஓரம்கட்டி, தன்பக்கம் பார்க்க வைத்த நயன்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தொடர்ந்து ஜோடியாக புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றனர். குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் அல்லது இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படம் என எப்போதும் வைரலாகவே உள்ளனர். கடைசியாக இவரது நடிப்பில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் நடித்த ஜவான் திரைப்படம் வெளியாகி இருந்தது. படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து, நயன்தாராவிற்கு பாலிவுட்டில் பெரிய ரீச் கொடுத்துள்ளது. தமிழ், மலையாளம், பாலிவுட் என பல படங்களில் கமிட்டாகி வருகிறார். நடிகை நயன்தாரா இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா சங்கரின் திருமணத்தில் விக்னேஷ் சிவனுடன் வந்தார். பார்க்க எளிமையாக உள்ள இவரது தோற்றத்தின் மதிப்பு கோடிக்கு மேல் இருக்கும் போல! 

கனமான நெக்லெஸ் அணிந்துள்ளார் அதன் மேல் தான் இணையவாசிகளின் கண்கள். இவரது புடவை என்ன விலை? வாட்ச் என்னவிலை? ஹேண்ட்பேக் என்ன விலை? என இவற்றை நிர்ணயிக்கவே ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. முக்கியமாக இவரது ஆடம்பர வாட்ச் அனைவரையும் கவர்ந்தது. அவர் அணிந்த வாட்ச் ரோலக்ஸ் ஆய்ஸ்டர் பெர்பெச்சுவல் 36. Oystersteel என்ற உலோகத்தில் தயாரிக்கப்பட்ட இந்த வாட்ச் எப்போதும் மினுமினுப்புடன் கண்களைப் பறிக்கும் அழகுடன் இருக்கும். இந்த ஸ்டைலிஷ் வாட்ச் விலை ரூ.5.30 லட்சம் என்று கூறப்படுகிறது.

Related Posts