நாடுகடந்த தமிழீழ அரசாங்க தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கனடாவுக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் நான்காவது நாடாளுமன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை: 

மிகவும் முக்கியம் வாய்ந்த இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வானது மிகவும் கடுமையான தேர்வு முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. கீழ்க்காணும் பட்டியலில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் உலகளாவிய தமிழ் சமூகத்தின் நலன்களை முன்னெடுப்பதில் வலுவான அர்ப்பணிப்புடனும் , நேர்மை மற்றும் சேவை மனப்பாங்குடனும் செயற்படக் கூடியவர்கள். 

அவர்களின் மாறுபட்ட பின்னணிகளும் அனுபவங்களும் புலம்பெயர்ந்த தமிழர்களின் செழுமையையும் துடிப்பையும் பிரதிபலிக்கின்றன. அவை நம் மக்களின் அபிலாஷைகளை உண்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றத்தை உறுதியளிக்கின்றது. 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடாவுக்கான தேர்தல் ஆணையாளர் மரியாதைக்குரிய திரு. சிவபாலன் பாலசுந்தரம் அவர்கள் தனது வாழ்த்து செய்தியில் "தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களையும் மனதார வாழ்த்துவதோடு, நாடு கடந்த அரசாங்கத்தினூடாக தமிழ்ச் சமூகத்திற்காக சேவையாற்ற முன்வந்திருக்கும் அனைவரின் சீரிய நோக்கத்தினையும் பாராட்டுகின்றேன்" என்று தெரிவித்துள்ளார். 

மேலும் , " இவர்களின் தெரிவானது, பரந்து வாழும் அனைத்து தமிழ் மக்களுக்குமான ஜனநாயகம், நீதி, மற்றும் மனித உரிமைகளை ஊக்கப்படுத்தும் நம் செயற்பாடுகளில் ஒரு முக்கியமான, முன்னோக்கிய நகர்வாகும் " எனவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த தேர்தலில் பங்குபெறும் நோக்கில் தம் வேட்புமனுக்களை சமர்ப்பித்து, பல்வேறு காரணிகளால் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவுத்துக் கொள்கின்றோம். தமிழர் நலனுக்கான அவர்களின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. வரவிருக்கும் தேர்தல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான தேர்தலாக இருக்கும் என்பது திண்ணம். 

இது வாக்காளர்களுக்கு இந்த அமைப்பின் எதிர்கால திசையை வடிவமைக்கும் வாய்ப்பை வழங்குகிறது. வேட்பாளர்கள் உற்சாகமான பிரச்சாரங்களில் ஈடுபட்டு , தமிழ் சமூகத்திற்கான அவர்களின் பார்வைகள் மற்றும் திட்டங்களை வெளிப்படுத்துவதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களின் ஆதரவைப் பெறுவார்கள் என நம்புகின்றோம்.

கனடாவுக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம், புலம்பெயர்ந்து வாழும் அனைத்து தமிழ் மக்களையும் இந்த தேர்தல் செயற்பாடுகளில் தீவிரமாக பங்கேற்குமாறு ஊக்குவிக்கின்றது. மக்கள் அனைவரும் தமக்கே உரித்தான வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்தம் குரல்கள் கேட்கப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றது.

 TGTE பற்றி

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) என்பது உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பாகும். 2010 இல் ஸ்தாபிக்கப்பட்ட TGTE ஆனது இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் சுயநிர்ணயம் ஆகியவற்றை நோக்கிச் செயற்படுகிறது.

வேட்பாளர் பட்டியல் 



Related Posts