பாகிஸ்தானை சேர்ந்த 19 வயது பெண் ஆயிஷா ரஷான். இவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு, இதய செயலிழப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக கடந்த 2014ல் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு ஆயிஷாவும், அவரின் குடும்பத்தினரும் வந்துள்ளனர்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆயிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள், இதய செயலிழப்பை சரி செய்ய பொருத்தப்பட்டுள்ள இதய பம்ப் வால்வு ஒன்றில் கசிவு ஏற்பட்டுள்ளதால் கட்டாயம் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், இதற்கு சுமார் 35 லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் கூறியுள்ளனர்.
இவ்வளவு பணத்திற்கு என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த ஆயிஷாவின் குடும்பத்திற்கு ஐஸ்வர்யம் அறக்கட்டளை மூலமாக மருத்துவக்குழுெஉதவி பெற்றுக்கொடுத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஆயிஷாவிற்கு டில்லியில் மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட இதயமும் வரவழைக்கப்பட்டது. தேவையான பணமும், இதயமும் கிடைத்ததை அடுத்து, ஆயிஷாவிற்கு சென்னை தனியார் மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.