ஏனைய நாடுகளுடன் ஈரான் நட்பாக இருப்பது எதிரிகள் வேறு கோணத்தில் அவதானிக்கின்றனர்: கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் ஈரான் ஜனாதிபதி ஆற்றிய உரை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


இந்த உலக நாடுகளில் மிகவும் ஒர் கொடியவர்களாக இஸ்ரேலர்களான சியோனிஸ்ச வாதிகள் செயல்படுகின்றார்கள் இவர்களது செயற்பாடுகளை உலகில் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்றாஹிம் ரைசி மற்றும் அவரது பாரியார் ஜெமீலே சதாத் அலமோல்ஹுதா உள்ளிட்ட குழுவினர் இலங்கை வந்தடைந்தனர்.

இதன்போது ஈரான் ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. இதனையடுத்து ஈரான் ஜனாதிபதி கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்திருந்தார் இதன்போது அங்கு அவர் உரையாற்றுகையில்,

ஈரான் நாட்டின் புரட்சித் தலைவர் தனது தலைவர் காலம் சென்ற இமாம் கொமெயினி அவர்கள் காலத்தில் 45 வருடங்களுக்கு முன்பே பலஸ்தீன் நாடு விடுவிக்கப்பட வேண்டும் என அன்றே அவர் பலஸ்தீன் பூமிக்கும் அந்த மக்களுக்காக குரல் கொடுத்திருந்தார்.

இந்த உலக நாடுகளில் மிகவும் ஒர் கொடியவர்களாக இஸ்ரவேலர்களான சியோனிஸ்ச வாதிகள் செயல்படுகின்றார்கள் இவர்களது செயற்பாடுகளை உலகில் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

குழந்தைகள் வயதானவர்களை கொலை செய்து வருகின்றனர். .இதற்காக அமெரிக்கா துனை நிற்கிறது. இஸ்லாம் உலக நாடுகளில் வளர்ச்சி அடைவதை இவர்களினால் பொறுத்துக் கொள்ள முடியாது

ஆனால் எங்களது நாடான ஈரான் இந்த உலகில் நவீன விஞ்ஞான தொழில்நுட்பம் , பொறியியல், நீர் மின்சாரம் போன்ற துறைகளில் உலகின் மேலோங்கி நிற்கும் நாடாக நாங்கள் முன்னேற்றம் கண்டு வருகிறோம்.

உலகில் 20 நாடுகளுக்கு மேல் எமது நீர் மின்சாரம், பொறியியல் மற்றும் விஞ்ஞானத்துறைகளில் எமது திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஓர் அங்கமாகவே உங்களது நாட்டில் நட்புறவாக இத் திட்டத்தினை அங்குராப்பணம் செய்த திட்டமாகும்.அத்துடன் எங்களது விஞ்ஞான வளர்ச்சிகளை பகிர்ந்து கொண்டுள்ளோம். (P)


Related Posts