Font size:
Print
பசுமைக் கட்சியின் துணைத் தலைவர் Angela Davidson நீதிமன்ற தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் 60 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
Vancouverரில் மரங்களை அகற்றும் போராட்டங்களில் பங்கு வகித்ததற்கு அவருக்கு புதன்கிழமை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்றத் தடை உத்தரவு, ஜாமீன் நிபந்தனைகளை மீறியதற்காக ஏழு குற்றவியல் அவமதிப்பு வழக்குகளில் அவர் தண்டிக்கப்பட்டார்.
Angela Davidson ஏற்கனவே சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 நாட்களுக்கு மேலதிகமாக 48 நாட்கள் சிறையில் இருப்பார். மேலும் 75 மணிநேரம் சமூக சேவை செய்ய வேண்டும் எனவும் அவருக்கு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Related Posts