கோடை காலத்தில் வெப்ப நிலை அதிகமாக இருப்பதால் உடலில் இருந்து வியர்வை மூலம் நீர்போக்கு அதிகமாக இருக்கும்.உடலில் போதுமான நீர் இல்லாமல் போவதால் மயக்கம், அஜீரணம், மற்றும் சரும பிரச்சனைகள் வரக்கூடும். இதனை தடுக்க நீர் மற்றும் சரியான உணவுகள் அருந்துவது அவசியம்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் வட உள்மாவட்டங்களில் மே 1ஆம் தேதி முதல் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், கோடை வெயிலை சமாளிக்க தொழிலாளர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தருமாறு பணி நிறுவனங்களுக்கு தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. தொழிற்சாலைகள், கட்டுமானப் பணி போன்ற வெப்பம் அதிகமாக இருக்கும் துறையில் பணிபுரிபவர்களுக்கு சுழற்சி முறையில் வேலை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை அவ்வப்போது கண்காணிக்க துணை இயக்குநர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் அரிசி பொதிகள் வழங்கல் | Thedipaar News