100க்கும் அதிக மாணவர்கள் கைது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ள பொலிஸார் 100க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்துள்ளனர்.

அவுஸ்டினின் டெக்ஸாஸ் பல்கலைகழகத்தில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஊடகவியலாளர்கள் உட்பட 34 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தென் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் 50 க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலுடன் தொடர்புகளை கொண்டுள்ள ஆயுதவியாபாரிகளுடனான  தொடர்பை துண்டிக்க வேண்டும் என கோரி நியூயோர்க்கின் கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தை சூழ கூடாரங்களை அமைத்து போராட்டங்களை ஆரம்பித்ததை தொடர்ந்து அமெரிக்காவின் பல பல்கலைகழங்களில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து இடைநிறுத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கலிபோர்னியாவில் யுசி பேர்க்லே மற்றும் யு எஸ் சி பல்கலைகழங்களில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

கலிபோரினா அரச பொலிடெக்னிக் பல்கலைகழகத்தில் தளபாடங்கள் கூடாரங்கள் போன்றவற்றை பயன்படுத்திக்கொண்டு மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் முற்றுகை போராட்டத்தை மேற்கொண்டதால்  பல்கலைகழகம் மூடப்பட்டது.

பாலஸ்தீன ஆதரவு குழுவை சேர்ந்த மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டமைக்கும் காசா யுத்தத்திற்காக பல்கலைக்கழகம் இஸ்ரேலுடனான உறவுகளை துண்டிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தும்  ஹவார்ட் பல்கலைகழக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாசசூட்ஸ் முதல் கலிபோர்னியா வரை பல பல்கலைகழங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை சுற்றி முற்றுகையிடும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.  


Related Posts
©   Thedipaar

கனடா தேர்தல் ஆணையம்