ஒன்றரை லட்சம் முதலீடு செய்தால் 67 லட்சம் கையில் இருக்கும்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

குழந்தைகளின் எதிர்காலத்துக்கு அரசாங்கம் பல விதமான சேமிப்பு மட்டும் முதலீட்டு திட்டங்களை செயல்பாட்டில் வைத்துள்ளது . சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையின் மீது வருடாந்தர அடிப்படையில் கூட்டும் வட்டியானது அதன் தொடக்கத்திலிருந்து 21 வருடங்கள் முதிர்ச்சியடைகிறது.ஒரு நபர் குறைந்தபட்சம் 250 ரூபாய் மற்றும் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை வருடாந்திர பங்களிப்பை செய்யலாம் இந்த திட்டத்தில் 8.2 % வட்டி வழங்கப்படுகிறது. சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் நீங்கள் சேமிக்கும் தொகைக்கு, அதிகபட்சமாக ஆண்டுக்கு ₹1,50,000 வரை வருமான வரி சட்டம் பிரிவு 80 சி இன் கீழ் வரி விலக்கு பெற்றுக்கொள்ளலாம். அது மட்டும் இல்லாமல் இதில் நீங்கள் பெறும் வட்டித்தொகைக்கு வரி கிடையாது. ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1.5 லட்சத்தை ஒரு பெற்றோர் முதலீடு செய்தால், கணக்கு முதிர்ச்சியின் போது ரூ.67.லட்சம் தாண்டி நல்ல ரிட்டன் கிடைக்கும்.

இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபரிப் பண்ணை | Thedipaar News

Related Posts
©   Thedipaar

கனடா தேர்தல் ஆணையம்