அரசு கார் ஓட்டுநர் பணிக்கு ஆள் தேவை! மாதம் சம்பளம் ரூ. 60,000 மேல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மத்திய அரசுக்கு கீழ் இயங்கி வரும் போஸ்ட் ஆபிஸில் காலியாக உள்ள கார் ஓட்டுநர் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் உள்ள நபர்கள் மே 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

 கல்வித்தகுதி : கார் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அது மட்டுமின்றி கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

 வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கு குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 27 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

 ஊதிய விவரம்: கார் ஓட்டுநர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை சம்பளம் வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் 100க்கும் அதிக மாணவர்கள் கைது! | Thedipaar News

Related Posts
©   Thedipaar

கனடா தேர்தல் ஆணையம்