வடக்கு, கிழக்கு பாடசாலைகளில் அரசியல் தலையீடு: ஜோசப் ஸ்ராலின்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள  பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுவதாகவும், குறிப்பாக தேசிய பாடசாலைகளில் தான் அரசியல் தலையீடுகள் தற்போது அதிகரித்து வருவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..

குறிப்பாக வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய பாடசாலையான யாழ் மத்திய கல்லூரியில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு அதிபரை கூட மாற்றியிருக்கின்ற ஒரு செயற்பாடு நடந்திருக்கிறது.

இதே போன்று தான் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பிலுள்ள தேசிய பாடசாலையான பட்டிருப்பு கல்லூரியிலும் அரசியல் தலையீடுகளுடனான சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கின்றது.

அங்கும் நியமிக்கப்பட்ட அதிபரை மாற்றி வேறு ஒருவரை தற்போது நியமித்திருக்கின்றர். அங்குள்ள அரசியல்வாதியானபிள்ளையான் கல்வி அமைச்சுடன் பேசி இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றார்.

தமது அரசியல் நலன்களுக்காக கல்வியிலும் அரசியல் தலையீடுகளை பாடசாலைகளில் செய்ய முயல்வது உண்மையில் ஒரு தவறான செயற்பாடாகும். எனவே பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் மேற்கொள்வதை அரசியல்வாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். கல்வி அமைச்சும் அதிகாரிகளும் இதற்கு இடமளிக்ககூடாது. (P)


Related Posts