அமெரிக்காவில் 20 அடி உயரம் பறந்து மரத்தில் மோதிய கார்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியாவின் குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் போர்சட் பகுதியை சேர்ந்த பெண்கள் ரேக்ஹாபென், சங்கீதாபென், மனீஷாபென். இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணம் கிரீன்வெலி பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், 3 பெண்களும் நேற்று ஒரே காரில் பயணம் செய்துள்ளனர். காரை ஆண் நபர் வேகமாக ஓட்டியுள்ளார். சாண்டோன் பாலம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி 4 வழிசாலையை கடந்து 20 அடி உயரத்திற்கு பறந்து சாலையின் மறுபுறம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ரேக்ஹாபென், சங்கீதாபென், மனீஷாபென் ஆகிய 3 இந்திய பெண்களும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். கார் டிரைவர் படுகாயமடைந்தார்.

அதிவேகம் காரணமாக இந்த விபத்து நடைபெற்றதாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபரிப் பண்ணை | Thedipaar News

Related Posts