60 வயது பெண் அழகிப் போட்டியில் வெற்றி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அர்ஜென்டினாவில் 60 வயது பெண் ஒருவர் அழகிப் போட்டியை வென்று உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

60 வயதில் இயல்பாக செயல்படுவதே இந்த காலகட்டத்தில் வியப்பாக பார்க்கப்படும் சூழலில், உடலையும், மனதையும் ஒருங்கே ஒரு நிலைப்படுத்தி அழகிப்போட்டியில் பட்டத்தை வெல்வது என்பது சாதாரணமான விடயம் கிடையாது.

அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தின் தலைநகரான லா பிளாட்டாவில் இருந்து போட்டியில் கலந்து கொண்ட ரோட்ரிக்ஸ், தொழில் ரீதியாக வழக்கறிஞர் மற்றும் பத்திரிகையாளர்.

இந்த சாதனையின் மூலம், அவர் தனது வயது பிரிவில் அழகு விருதை வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மே மாதம் நடைபெற இருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அர்ஜென்டினாவிற்கான தேசிய தேர்வில் பியூனஸ் அயர்ஸை பிரதிநிதித்துவப்படுத்த அவர் தகுதி பெற்றுள்ளார், மேலும் அவர் வெற்றி பெற்றால், பிரபஞ்ச அழகிக்கான உலகளாவிய போட்டிக்கு தகுதி பெறுவார்.

இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டி செப்டம்பர் மாதம் மெக்சிகோவில் நடைபெற உள்ளது.  

Related Posts
©   Thedipaar

கனடா தேர்தல் ஆணையம்