35 கோடி பெறுமதி போதைப்பொருட்கள் கைது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பியகம மற்றும் மஹரகம ஆகிய பகுதிகளில் சுமார் 35 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
 பியகம காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று முன் தினம் (26) பண்டாரவத்த பகுதியில் மகிழுந்து ஒன்றை சோதனையிட்டுள்ளனர்.
 
அதன்போது, 15 கிலோகிராம் 81 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 14 கிலோகிராம் 527 மில்லிகிராம் ஹேஷ் ரக போதைப்பொருள் மற்றும் 941 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
 
அதன்போது மகிழுந்தில் இருந்த கடுவலை - பொமிரிய பகுதியைச் சேர்ந்த 30  வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அதேநேரம் குறித்த பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில் போதைப்பொருட்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
7 கிராம் 620 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 2 சந்தேக நபர்களும், 220 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப் பொருளுடன் மற்றுமொரு சந்தேக நபரும் இந்த சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைது செய்யப்பட்டவர்கள் 31 மற்றும் 40 வயதுகளுக்கு இடைப்பட்ட கடுவலை, அரலகங்வில மற்றும் சியம்பலாபே ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை, மஹரகம - நாவின்ன பகுதியில் 8 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சந்தேகநபர் 45 வயதுடைய ஒருவரெனவும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 16 கோடி ரூபாய் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.  

Related Posts
©   Thedipaar

கனடா தேர்தல் ஆணையம்