கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை வருமா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

2019 டிசம்பர் இறுதியில் பரவத் தொடங்கி உலகம் முழுவதும் பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனாவை தடுக்க தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டன.அந்த வகையில் கோவிஷீல்டு தடுப்பூசியை ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனமும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கியது. கோவிஷீல்டு, கோவாக்சின், நோவாவேக்ஸ், பிஃபைசர் என பல தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டன. கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்த ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஓர் ஆவணத்தில் மட்டும் கோவிஷீல்டு அரிதாக ரத்த உறைதல், ரத்த தட்டுக்கள் குறைதலை ( TTS - Thrombosis with Thrombocytopenia Syndrome) பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது. 

தீராத தலைவலி, வயிற்று வலி, கால் வீக்கம், மூச்சுவிடுவதில் சிரமம், சிந்திக்கும் திறனில் மாற்றம் போன்றவை இதன் அறிகுறிகள் எனக் கூறப்படுகிறது. இதயத்தில் ரத்தம் உறைந்தால் இதயத்திற்கு போகும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதுதான் மாரடைப்புக்கு காரணமாகிறது. மூளையில் ரத்தம் உறைந்தால் மூளை பக்கவாதம், மூளை செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts