சிலிண்டர் விலை அதிரடியாக குறைவு! அடேங்கப்பா எவ்வளவு குறைச்சுட்டாங்க !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.19 குறைந்துள்ளது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய விலையின்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1,911க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி இணையத்தில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்து விட்டதாக உலா வந்து கொண்டு இருக்கிறது அது முற்றிலும் வதந்தியே!

உயர்த்துவது ரூபாய் நூறு இறங்குவது ரூபாய் 19 இதில் என்ன மகிழ்ச்சி? வணிக சிலிண்டர் விலை குறைத்தால் யாருக்கு லாபம்? வீட்டு பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைத்தால் அனைத்து குடும்ப இல்லத்தரசிகளும் சந்தோசம் அடைவார்கள். நீங்கள் வணிக சிலிண்டர் விலை குறைத்தால் டீ மற்றும் உணவகம் கடை காரன் ஒரு டீக்கு, ஒரு இட்லிக்கு 50 பைசா கூட குறைக்க மாட்டார்கள். கண்டிப்பாக இந்த செய்தி எங்க போய் மக்களுக்கு சாதகமான தகவலாக இருக்க போகிறது?

Related Posts
©   Thedipaar

தல–தளபதி சந்திப்பு

©   Thedipaar

யாழில் கொடூர கொலை !