கனடாவில் வேலை செய்யும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கட்டுப்பாடு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கனடாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களை குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பணிபுரிய அனுமதி இல்லை. அப்படி பணி புரிய அனுமதி தந்தால் சிலர் கனடாவுக்கு வரும் நோக்கமே கல்வி கற்பதற்காக அல்லாமல் பணி புரிவதற்காக மாறிவிடுகிறது என கனடா புலம்பெயர்தல் துறை தெரிவிக்கிறது. 

கனடாவில் கல்வி கற்க வரும் மாணவர்கள், தங்கள் பணத்தேவைகளுக்காக, வாரத்தில் 20 மணி நேரம் வேலை செய்யலாம் என அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

கோவிட் கால கட்டத்தில் கனடாவில் பணியாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அதை சமாளிக்க கல்வி கற்கும் மாணவர்கள் வாரத்தில் 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்யலாம் என்னும் கட்டுப்பாடு அகற்றப்பட்டது.

அதனால் வெளிநாட்டு மாணவர்கள் இதுவரை 20 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்து வந்தனர். இனி அது முடியாது. செப்டெம்பர் மாதத்திற்கு வாரத்தின் அதிகபட்ச வேலை நாட்களை 24 மணி நேரமாக அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. 

கனடாவில் வேகமாக பரவி வரும் வைரஸ் | Thedipaar News

Related Posts