நெடுஞ்சாலை 401ல் நடந்த விபத்தில் குழந்தை உட்பட 4 பேருக்கு சோகம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

திங்கட்கிழமை இரவு Whitby நகரில் நடந்த விபத்தில் 4 பேர் மரணமடைந்தனர். Clarington நகரில் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் குறித்த விசாரணைக்கு மாலை 7:50 மணி அளவில் Durham பிராந்திய காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.

சந்தேக நபர் வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளார். காவல்துறையினர் துரத்தி சென்றனர். சந்தேகத்திற்குரிய வாகனம் தவறான திசையில் சென்று 401 நெடுஞ்சாலையில் நுழைந்தது.

இதன் போது பல வாகனங்கள் நெடுஞ்சாலை 412ன் கிழக்கே மோதியதில் 4 உயிரிழப்புகள் ஏற்பட்டது என Durham காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒரு கைக்குழந்தை, அந்த குழந்தையின் 55 வயதான தாத்தா 60 வயதான பாட்டி ஆகியோர் கொல்லப்பட்டனர். சந்தேகத்திற்கிடமான வாகனத்தின் சாரதியும் உயிரிழந்துள்ளார்.மொத்தம் ஆறு வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகியுள்ளன. 

கனடாவில் வேகமாக பரவி வரும் வைரஸ் | Thedipaar News

Related Posts