மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி மகன்களை பார்த்ததுண்டா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சமையல் துறையின் மூலம் பிரபலமாவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். இணையம் முழுக்க இவருக்கு ரசிகர்கள் ஏராளம். காரணம் தனக்கு கொடுக்கப்பட்ட தொழிலை சரியாக செய்யவேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளார். இதனாலே இவரை பின்பற்றுவோர் அதிகம். இதன்பின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நேரடியாக ஓடிடியில் நேரடியாக வெளிவந்த பென்குயின் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷின் கணவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

திரையுலக நட்சத்திரங்கள் முதல் பிரதமர் மோடி, ஒபிஸ்,ஸ்டாலின் வரை பலருக்கும் தன் கையால் சமைத்து கொடுத்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கியுள்ளார். முதல் எபிசோடில் இருந்து ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாதம்பட்டி ரங்கராஜின் குடும்பத்தை பலரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த நிலையில், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மாதம்பட்டி ரங்கராஜ் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.

Related Posts