மக்கள் இப்போதெல்லாம் சீரியல் பார்க்க வேண்டும் என்றால் கூட அதில் லாஜிக் உள்ள சீரியல்களை தான் பார்க்கிறார்கள்.இந்த காலத்திலும் தாவணி பாவாடை அணியும் ஹீரோயின், ஏழை பெண்ணை காதலிக்கும் பணக்கார ஹீரோ என இது போன்ற லாஜிக் இல்லாத கதைகளை மக்கள் விரும்புவதில்லை. அந்த வகையில் இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை பலருக்கும் பிடித்தமான சீரியல். அண்ணாமலை என்பவர் தனது 3 மகன்கள், மருமகள்களுடன் ஒன்றாக வாழ வேண்டும் என்ற ஆசை உடையவர், ஆனால் அவரின் ஆசையை கெடுக்கும் வகையில் குடும்பத்தில் பிரச்சனைகள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்த தொடரில் முத்துவின் நண்பனாக செல்வம் கதாபாத்திரத்தில் நடிப்பவர் பழனியப்பா. இவர் கவுண்டமணியின் ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் அந்த படத்தில் நீண்ட டயலாக் ஒன்றை எளிதாக பேசி அனைவரையுமே ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
அவரின் நடிப்பை பார்த்து வியந்த கவுண்டமணி அவரை பாராட்டியுள்ளார். அதோடு நீ பெரிய நடிகராக வருவாய் என்றெல்லாம் புகழ்ந்து பேசி இருக்கிறாராம். கவுண்டமணியே பாராட்டும் அளவிற்கு ஒரு துணை நடிகர் இருந்துள்ளார் என்றால் அது இவர் தான் என நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.