விண்வெளியில் இருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சிறுகோள் ஆய்வில் ஈடுபட்ட சைக் விண்கலம், 14 கோடி மைல் தொலைவில் இருந்து பொறியியல் சார்ந்த தகவல்களை நாசாவுக்கு அனுப்பியுள்ளது. இந்த தொலைவானது பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தொலைவை போன்று 1.5 மடங்கு கொண்டது.இந்த டி.எஸ்.ஓ.சி. சாதனம் ஆனது, சைக் விண்கலத்தின் ரேடியோ டிரான்ஸ்மிட்டருடனும் தொடர்பு கொண்டு அதில் வெற்றியடைந்து உள்ளது. 

இதனால், விண்வெளியில் இருந்து தகவல் மற்றும் தரவுகளை நேரடியாக பூமிக்கு அனுப்ப முடிந்தது. எனினும், அந்த விண்கலம் அதிக தொலைவுக்கு சென்று விட்டது. 

அதனால், அதன் தகவல் பரிமாற்ற விகிதம் குறைவாக உள்ளது.ஆனால், இந்த திட்டத்தின் இலக்கை விட 25 மடங்கு கூடுதலான விகிதத்தில் தரவுகளை பரிமாறி விண்கலம் சாதனை படைத்துள்ளது. அதனுடன், சைக் 16 சிறுகோளை நோக்கிய தன்னுடைய பயணத்தில் தொடர்ந்து, நிலையாக மற்றும் இயல்பாக சைக் ஈடுபட்டு வருகிறது.

Related Posts