இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 7 கோடி வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை தடை செய்துள்ளதாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
இந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து 31 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் வாட்ஸ்அப் சுமார் 7.9 மில்லியன் அக்கவுண்ட்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 31 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் வாட்ஸ்அப் சுமார் 69 மில்லியன் அக்கவுண்ட்களை தடை செய்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-இன் கீழ் வாட்ஸ்அப் தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை விளக்கும் அறிக்கையை வாட்ஸ்அப் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.
அவ்வாறு வெளியிடப்பட்ட அறிக்கையில் தான் இந்தியாவில் சுமார் ஏழு கோடி அக்கவுண்ட்கள் தடை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
vairamuthu vs ilayaraja | Thedipaar News