ஆசிய பிராந்திய வலயத்தில் வீசா கட்டணம் மிகவும் அதிகமான நாடாக இலங்கை மாற்றமடைந்துள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறைசார் அமைப்புக்கள் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளன.
தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட ஏனைய பல ஆசிய நாடுகளை விடவும் இலங்கையில் வீசா கட்டணங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளன.
இதனால் சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணி ஒருவரின் வீசா கட்டணம் 100 டொலர்கள் வரையில் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்று வீசா பெற்றுக்கொள்ள 400 டொலர் செலவிட நேரிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வீசா முறைமையில் ஏற்பட்டுள்ள மாற்றம் சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறைசார் தொழில்களில் ஈடுபட்டு வரும் பல்வேறு அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இந்த கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளன. (P)
பிரபு தேவாவை திட்டி தீர்க்கும் மக்கள் | ஏன்? | Thedipaar News