இலங்கை இராணுவத்திலிருந்து அதிரடியாக நீக்கப்படும் இளைஞர்கள்! காரணம் என்ன?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் விடுமுறை எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத இலங்கை இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய விடயங்களுக்கும் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொது மன்னிப்புக் காலத்தில் இதுவரை, 9,770 இராணுவத்தினர் சேவையில் இருந்து விலகியுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும், 9,735 ராணுவ சிப்பாய்கள் தங்களது ரெஜிமென்ட் மையங்களில் இருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், தற்போது விடுமுறை எடுக்காமல் மற்றும் கடமைக்கு சமூகமளிக்காமல் வெளிநாட்டில் இருக்கும் 35 இராணுவ வீரர்களும் இராணுவ சேவையில் இருந்து உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த பொது மன்னிப்பு காலம் மே மாதம் 20 ஆம் திகதி வரை செல்லுபடியாகும். (P)

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை நீந்தி கடந்து சாதனை படைத்த 12 பேர் | Thedipaar News

Related Posts