Font size:
Print
பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம சேவகர்கள் நாடளாவிய ரீதியில் கடமைகளில் இருந்து விலகி, சுகயீன விடுமுறையை அறிவித்து இன்று (06) மற்றும் நாளையும் (07) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அகில இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜெகத் சந்திரலால், கிராம உத்தியோகத்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து சங்கங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
“பொறுத்தது போதும்” என்ற தொனிப்பொருளில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் தமது பிரச்சினைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தாவிடின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். (P)
கொழும்பில் இடைநிறுத்தப்பட்ட இலகு தொடருந்து திட்டம் மீள ஆரம்பம் | Thedipaar NewsRelated Posts