வரும் 13ம் தேதி முதல் நாகப்பட்டினம்-காங்கேசன்துறை இடையே கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில், மின்விநியோகம் வழங்கும் வகையில் பவர் கிரிட் இணைப்பு, இருவழி குழாய் இணைப்பு மற்றும் பொருளாதார வழித்தடம் என இலங்கையுடனான இணைப்பு திட்டங்களை இந்தியா செயல்படுத்த உள்ளது.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பதற்காக இந்தியா 63.65 மில்லியன் டாலர்களை, அதாவது முழு திட்டச் செலவையும் இலங்கைக்கு வழங்கியுள்ளது. இது இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான இந்தியாவின் வலுவான அர்ப்பணிப்பை காட்டுகிறது.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து புறப்படும் பயணிகள் கப்பல் சுமார் மூன்றரை மணி நேரத்தில் காங்கேசன்துறை துறைமுகத்தை சென்றடையும். இண்ட்ஸ்ரீ கப்பல் சேவை என்ற தனியார் நிறுவனம் மூலம் கப்பல் இயக்கப்படும்.இந்தியாவில் இருந்து இலங்கை செல்வோருக்கு விசா தேவையில்லை, பாஸ்போர்ட் இருந்தாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை நீந்தி கடந்து சாதனை படைத்த 12 பேர் | Thedipaar News