இந்திய அரசால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்ரேயில் உள்ள குருத்வாராவுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டான்.
கனடா குடிமகனான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் இந்தியா-கனடா உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கனடாவின் குற்றச்சாட்டையும் இந்தியா நிராகரித்தது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாகக் கரன் பிரார், கமல்ப்ரீத் சிங், கரன்ப்ரீத் சிங் ஆகிய மூன்று இந்தியர்களை கனடா போலீசார் கைது செய்துள்ளனர். எட்மாண்டன் பகுதியில் வசித்து வந்த அவர்கள் மீது கொலை மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் கூறுகையில், "இது முக்கியமான விஷயம். ஏனென்றால் கனடா வலுவான மற்றும் சுதந்திரமான நீதி அமைப்பைக் கொண்ட ஒரு சட்டத்தின் ஆட்சி நடக்கும் ஒரு நாடு. நாட்டின் அனைத்து குடிமக்களையும் பாதுகாப்பதற்கான அடிப்படை அர்ப்பணிப்பு கொண்டுள்ள நாடு" என்றார்.
கொழும்பில் இடைநிறுத்தப்பட்ட இலகு தொடருந்து திட்டம் மீள ஆரம்பம் | Thedipaar News