திடீரென மரணமடைந்த பிரபல டைட்டானிக் நடிகர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உலகளவில் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஒன்று டைட்டானிக். உண்மை கதையை தழுவி எடுத்ததால் இந்த படத்தை எப்போது பார்த்தாலும் ஆர்வம் குறையாது. அதுபோல் எந்த தலைமுறையினர் இந்த படத்தை பார்த்தாலும் கண்டிப்பாக பிடித்துப்போகும். விறுவிறுப்பான சூழலில் ஒரு அழகிய காதலை கூறிய படம், இந்த இன்று வரை உலகளவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்களின் வரிசையில் 4வது இடத்தில் உள்ளது டைட்டானிக். இப்படத்தில் கேப்டன் எட்வர்டு ஜான் ஸ்மித் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் பெர்னார்ட் ஹில். இந்த நிலையில் 80 வயதாகும் நடிகர் பெர்னார்ட் ஹில் மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.இவர் ஹாலிவுட்டில் வெளிவந்த 1970களில் இருந்து சினிமாவில் நடித்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் பஸ் விபத்து | Thedipaar News

Related Posts